website statistics

Wednesday, November 09, 2005

பதிலா உயிரா? - தினம் ஒரு ஸென் கதை

ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா'ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்து, "உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்" என்றவர், "கீழே சவகாசமாக அமர்ந்திருக்கும் மற்றொரு மனிதன், மேலேத் தொங்கிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து, 'மேற்கிலிருந்து போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?' என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது மேலேயிருப்பவன் பதில் சொல்லவில்லையென்றால் முட்டாளாக கருதப் படுவான். ஆனால் வாயைத் திறந்தாலோ எமனுக்கு இரையாகிவிடுவான். சொல்லுங்கள், இதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

அங்கிருந்த சீடர்களில் ஒருவனது பெயர் ஹு டோ சாவோ, அவன் எழுந்து நின்று, "எங்களுக்கு அந்த மனிதன் உயரமான மரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றியக் கவலையில்லை. எங்களுக்குத் தேவையானதெல்லாம் யார் அவன், மரத்தின் மேலே ஏறுவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று பதிலுக்கு ஆசிரியரைப் பார்த்துக் கேள்வி கேட்டான்.

அவன் கூறியதைக் கேட்ட ஷிஷைன் அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினார். சீடனின் பதிலில் திருப்தி அடைந்தவரானார்.

வருகை தந்ததற்கு மிகவும் நன்றி! வாசித்த பின் உங்களுக்கு ஆர்வமிருந்தால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 'சுமார் (-)' அல்லது 'அருமை (+)' என்பதில் ஒன்றை தேர்ந்தெடுத்து www.thamizmanam.comதில் இந்த பதிவை மதிப்பீடு செய்யலாம். தற்போதய மதிப்பிட்டை இந்த நட்சத்திரங்களின் மீது மௌஸை நிறுத்தி காணலாம்: வாக்களிக்க நட்சத்திரங்களை சுட்டவும். நன்றி!

Tuesday, November 08, 2005

நதியினைக் குடி - தினம் ஒரு ஸென் கதை

ஒரு சமயம் பா'ன் யூன் என்ற துறவி, சா'ன் ஆசிரியர் ஷிடோவை முதன் முதலில் சந்தித்த போது, "எல்லா தர்மங்களின் துணையினையும் உதறித் தள்ளிய மனிதர்கள் எப்படிப் பட்ட மனிதர்களாக இருக்க முடியும்?" என்று கேட்டான். கேட்டவனின் வாயை அப்படியே தனது கைகளால் பொத்தினார் ஷிடோ. துறவியால் சா'ன் ஆசிரியரின் செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை.

மதிப்புக்குரிய குரு மாசூவிடம் சென்று தன்னுடைய கேள்வியினைக் கேட்பதென முடிவெடுத்து, அதேக் கேள்வியைத் திருப்பிக் கேட்டான்.

"நீ ஷிஷியாங் ஆற்றின் தண்ணிரினை ஒரே மிடக்கில் குடித்துக் காட்டினால்தான், நான் உன்னுடையக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும்" என்ற பதிலே கிடைத்தது.

அதனைக் கேட்ட பா'ன் யூன் தன்னுடைய அறியாமை நீங்கி தன்னொளி பெற்றான்.

வருகை தந்ததற்கு மிகவும் நன்றி! வாசித்த பின் உங்களுக்கு ஆர்வமிருந்தால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 'சுமார் (-)' அல்லது 'அருமை (+)' என்பதில் ஒன்றை தேர்ந்தெடுத்து www.thamizmanam.comதில் இந்த பதிவை மதிப்பீடு செய்யலாம். தற்போதய மதிப்பிட்டை இந்த நட்சத்திரங்களின் மீது மௌஸை நிறுத்தி காணலாம்: வாக்களிக்க நட்சத்திரங்களை சுட்டவும். நன்றி!

Monday, November 07, 2005

உருவ வழிபாடு - தினம் ஒரு ஸென் கதை

ஹுவாங்னியா என்ற ஸென் ஆசிரியர் யேன்குவாங்கினை சந்திப்பதற்காக சென்றார். யேன்குவாங்கி ஆசிரியராக இருந்த புத்த கோயிலிற்குள் நுழைந்தவர் அமைதியாக புத்தச் சிலையின் முன் தலை வணங்கி நின்றார். அந்த சமயத்தில் டா'ங் ராஜ வம்ச பரம்பரையைச் சார்ந்த ஷூவான்சூங் என்ற வாலிபன் புதிதாக சமய சேவையைப் பற்றி அறிவதற்காக அங்கு வந்திருந்தான்.

ஹுவாங்னியா செய்த செயல் அனைத்தையும் கவனித்த ஷூவான்சூங், "உண்மை வழியினை அடைய முயல்பவர்களுக்கு, புத்தாவினை தலை வணங்கத் தேவையில்லை, துறவறம் ஏற்க வேண்டியதில்லை (அ) யார் கூறிய போதனைகளையும் கடைபிடிக்கத் தேவையில்லை, அப்படியிருக்க ஆசிரியரே, எதற்காக தலை வணங்கி புத்தருடையச் சிலைக்கு மரியாதை செய்தீர்கள்" என்று கேட்டான்.

"நான் புத்தரினை வழிபடுவதில்லை. துறவியும் இல்லை. எந்த போதைனையையும் உடும்பென பிடித்துக் கொண்டும் இல்லை" என்று கொஞ்சம் கூட தாமதியாமல் பதில் அளித்த ஆசிரியர், "நான் என்னிலிருந்து விடுதலை பெறவே அவ்வாறு செய்கிறேன்" என்றார்.

கொஞ்சம் நேரம் ஆசிரியர் கூறியதை மனதில் நிறுத்தி யோசித்தவன், "உருவ வழிபாட்டினால் என்ன பயன் ஆசிரியரே?" என்று மீண்டும் தன் கேள்வியை எழுப்பினான்.

அவனுடையக் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார் ஹுவாங்னியா.

வாலிபனானாலும் அரசனான ஷூவான்சூங் சீற்றத்துடன், "ஏன், நாகரிகமில்லாமல் மிருகத்தைப் போல் நடந்து கொள்கிறிர்கள்?" என்று கோபத்துடன் கேட்டான்.

"ஏன்" என்று வேகமாக திருப்பிக் கேட்டவர், அவனுடைய குற்றச்சாட்டுக்கு விரைவாய் பதிலளிக்கும் பொருட்டு, "உன்னால் யார் நாகரிகமானவர், நாகரிகமற்றவர் என்று என்னிடம் விவாதம் செய்யுமளவிற்கு தைரியம் இருக்கிறதா.. உனக்கு வாய் கொஞ்சாம் அதிகமாகவே நீள்கிறது" என்றார். அதனைக் கேட்ட ஷூவான்சூங் தன்னுடைய அடக்கமற்ற தன்மையை எண்ணி வருந்தினான்.

வருகை தந்ததற்கு மிகவும் நன்றி! வாசித்த பின் உங்களுக்கு ஆர்வமிருந்தால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 'சுமார் (-)' அல்லது 'அருமை (+)' என்பதில் ஒன்றை தேர்ந்தெடுத்து www.thamizmanam.comதில் இந்த பதிவை மதிப்பீடு செய்யலாம். தற்போதய மதிப்பிட்டை இந்த நட்சத்திரங்களின் மீது மௌஸை நிறுத்தி காணலாம்: வாக்களிக்க நட்சத்திரங்களை சுட்டவும். நன்றி!

Friday, November 04, 2005

ஸென் கல்வி - தினம் ஒரு ஸென் கதை

ஒரு நாள் ஹோஃபுக்குவின் சீடர்களில் ஒருவனை வரவேற்ற ஜிஸோ, "உன்னுடைய ஆசிரியர் என்னக் கற்றுக் கொடுத்தார்?" என வினவினார். "என்னுடைய ஆசிரியர் எந்த தீயவைகளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்; தீயவைகளை கேட்காமல் காதை மூடிக் கொள்ளச் சொன்னார்; தீய எண்ணங்களை மனதினில் உருவாக்கமல் பார்த்துக் கொள்ளச் சொன்னர்" என்று சீடன் பதிலுரைத்தான்.

"நான் உன்னுடைய கண்களை மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன்" என்ற ஜிஸோ, "ஆனால் நீ எதையும் பார்க்க மாட்டாய். உன்னுடைய காதுகளை கைகளால் மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன், ஆனால் நீ எதையும் கேட்க மாட்டாய். உன்னுடைய மனதின் எண்ண அலைகளை நிறுத்தச் சொல்ல மாட்டேன்; ஆனால் நீ எந்த சிந்தனையையும் மனதில் ஏற்படுத்தாமல் இருப்பாய்" என்றார்.

வருகை தந்ததற்கு மிகவும் நன்றி! வாசித்த பின் உங்களுக்கு ஆர்வமிருந்தால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 'சுமார் (-)' அல்லது 'அருமை (+)' என்பதில் ஒன்றை தேர்ந்தெடுத்து www.thamizmanam.comதில் இந்த பதிவை மதிப்பீடு செய்யலாம். தற்போதய மதிப்பிட்டை இந்த நட்சத்திரங்களின் மீது மௌஸை நிறுத்தி காணலாம்: வாக்களிக்க நட்சத்திரங்களை சுட்டவும். நன்றி!

Thursday, November 03, 2005

கற்பாலம் - தினம் ஒரு ஸென் கதை

இன்றைய கோஆன் மிகவும் புகழ் பெற்றது. இது சாவோ சாவ் என்ற நகரத்தில் வாழ்ந்த என்பது வயதான சவோ சாவிற்கும் (ஊரின் பெயரே ஸென் குருவின் பெயராகி விட்டது. இந்தியாவில் கூட ஊரின் பெயரே புகழ் பெற்றவர்களின் பெயர் ஆகிவிடுவதுண்டு. நாளடைவில் புகழ் பெற்றவர் ஊர் பெயராலேயே அழைக்கப் படுவது வழக்கம்.) அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவி ஒருவருக்கும் நடந்த உரையாடலாகும்.

குரு சாவோ சாவிடம் வந்த துறவி ஒருவர், "வெகு நாட்களுக்கு முன்பிருந்தே சாவோ சாவிலிருக்கும் புகழ் பெற்ற கற்பாலத்தினைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இங்கு வந்த பின்பு நான் பார்ப்பது என்னவோ வெறும் சாதரண மரப்பாலம்தான்" என்றார்.

சவோ "மரப்பாலத்தினை மட்டும் தான் உங்களால் பார்க்க முடிகிறது; ஆனால் கற்பாலம் இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை" என்று பதிலுரைத்தார்.

துறவி, "கற்பாலமா என்ன?"

சவோ, "கழுதைகளையும் கடக்க வைக்கிறது, குதிரைகளையும் கடக்க வைக்கிறது".

வருகை தந்ததற்கு மிகவும் நன்றி! வாசித்த பின் உங்களுக்கு ஆர்வமிருந்தால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 'சுமார் (-)' அல்லது 'அருமை (+)' என்பதில் ஒன்றை தேர்ந்தெடுத்து www.thamizmanam.comதில் இந்த பதிவை மதிப்பீடு செய்யலாம். தற்போதய மதிப்பிட்டை இந்த நட்சத்திரங்களின் மீது மௌஸை நிறுத்தி காணலாம்: வாக்களிக்க நட்சத்திரங்களை சுட்டவும். நன்றி!

Wednesday, November 02, 2005

கண்ணாடியான செங்கல் - தினம் ஒரு ஸென் கதை

சைனாவின் சூஷுவானில் பிறந்த சா'ன் ஆசிரியர் மாசூ தன்னுடைய சிறு வயதில் அனுபவமற்ற இளவயது துறவிகளுடன் புத்த விகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வயதில் தன்னையும் துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டான்.

நான்யூவேஷான் மலையிலிருந்த பான் ஜோ சூ கோயிலின் மாண்புமிக்க தலைமைக் குருவாக இருந்தவர் ஹுவாய் ஜாங், அங்கு சா'னினை கற்பதற்காக வந்திருந்த மாசூவினைப் பார்த்தவுடன் தன்னொளி பெறுவதற்கு தகுதியானவனாக இருந்ததைக் கண்டார்.

ஹுவாய் ஜாங் மாசூவினைப் பார்த்து, "எதற்காக உட்கார்ந்த நிலையில் செய்யும் சா'ன் தியானத்தினைப் பயில வேண்டும் என்கிறாய்?" என்று கேட்டார்.

"புத்தாவாக மாறுவதற்கு" என்று பதில் வந்தது.

உடனே பக்கத்தில் இருந்த செங்கல்லினை எடுத்து தேய்க்கலானார்.

இளம் துறவியான மாசூ, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான்.

"இந்த செங்கல்லினை கண்ணாடியாக மாற்றுவதற்காக வழவழப்பாக தேய்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

"செங்கல்லினை தேய்ப்பதால் மட்டுமே எப்படி கண்ணாடியாக மாற்ற முடியும்?" என்றான் மாசூ.

"நீ உட்கார்ந்த சா'ன் தியானத்தினை கற்பதால் மட்டுமே புத்தாவாக மாற முடியும் என்கிற போது நான் ஏன் செங்கல்லினை தேய்த்து கண்ணாடியாக மாற்ற முடியாது?" என்று கேட்டார் குரு ஹுவாய் ஜாங்.

கொஞ்சம் நேரம் குரு ஹுவாய் ஜாங் கூறியதை யோசித்துப் பார்த்த மாசூ, "ஆசிரியரே, என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்" என்றான்.

"நீ ஓட்டிச் செல்லும் கட்டை வண்டி தீடிரென நகராமல் நின்று விட்டது என்று வைத்துக் கொள்வோம்" என்ற ஹுவாய் ஜாங், "அந்த சமயத்தில் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டவர், பின்பு தொடர்ந்து, "உன்னுடைய எருதினை ஓட்டிச் செல்வாயா அல்லது கட்டை வண்டியை ஓட்டிச் செல்வாயா?" என்ற கேள்வியினைத் தொடுத்தார்.

மாசூவினால் எந்த பதிலினையும் சொல்ல முடியவில்லை. மேலும் தொடர்ந்த குரு "நீ உட்கார்ந்த நிலையில் சா'ன் தியானத்தினைக் கற்க விரும்புகிறாயா அல்லது 'உட்கார்ந்த புத்தா'வினையைக் கற்க விரும்புகிறாயா?. உனது விருப்பம் என்ன?" என்று கேட்டார். "நீ முதலில் கூறியதைக் கற்க விரும்பினால் அதனை உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது தூங்கிக் கொண்டேக் கூட பயிற்சி செய்யலாம். நீ இரண்டாவதாக கூறியதைக் கற்க விரும்பினால் புத்தருக்கு என குறிப்பிட்ட தோற்றநிலை இல்லை. உண்மையில் புத்தருடைக் கோட்பாடுகள் சமயக் கொள்கைகள் அல்ல. அதனால் அவருடைக் கருத்துக்கள் தத்துவமும் அல்ல. சித்தாந்தமும் அல்ல. உண்மையான வழியினை அடைவதற்கு உட்கார்ந்த சா'ன் தியானத்தினைப் பின்பற்றுவது புத்தாவை படுகொலை செய்வதற்கு சமம். அதனால் உன்னால் என்றும் உணமை வழியினை அடைய முடியாது." என்றார்.

குரு ஹுவாய் ஜாங் கூறியதைக் கேட்ட மாசூ தன்னுடைய உடலில் விசித்திரமான ஒளி புத்தத் தன்மையுடன் புகுவதைப் போல் உணர்ந்தான். மரியாதையுடன் கூறிய வணக்கத்தினைத் தெரிவித்து தன்னை அவருடைய சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டினான்.

வருகை தந்ததற்கு மிகவும் நன்றி! வாசித்த பின் உங்களுக்கு ஆர்வமிருந்தால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 'சுமார் (-)' அல்லது 'அருமை (+)' என்பதில் ஒன்றை தேர்ந்தெடுத்து www.thamizmanam.comதில் இந்த பதிவை மதிப்பீடு செய்யலாம். தற்போதய மதிப்பிட்டை இந்த நட்சத்திரங்களின் மீது மௌஸை நிறுத்தி காணலாம்: வாக்களிக்க நட்சத்திரங்களை சுட்டவும். நன்றி!

Tuesday, October 18, 2005

நிலவைச் சுட்டிக் காட்டு - தினம் ஒரு ஸென் கதை

ஒரு பால் நிலா காயும் இரவு. சான் குரு ஃபாயாவும், அவரது இரண்டு சீடர்களான துறவிகளும் திறந்த வெளியில் மணல் பரப்பின் மீது உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நிலாவினைச் சுட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் நடந்த சுவரசியமான உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதையின் கருவாகும்.

முதலாம் துறவி சா'ன் குரு ஃபாயானிடம் "குருவே, உங்களிடம் நான் 'சுட்டு' என்பதன் அர்த்தத்தைக் கேட்கவில்லை. 'நிலா' என்பதன் உண்மையான அர்த்தத்தினை எனக்கு விளக்கிக் கூறவேண்டும்" என்று கேட்டான்.

" 'சுட்டு' என்பதன் பொருளை நீ உணர்ந்து விட்டதாக தெரிகிறது. எனக்கு அதன் பொருளைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் சா'ன் குரு.

அந்த சமயத்தில் இரண்டாம் துறவி, "குருவே, உங்களிடம் 'நிலா'வின் அர்த்தத்தினை கேட்க விரும்பவில்லை. 'சுட்டு' என்பதன் உண்மைப் பொருளை விளக்க வேண்டும்" என்று கேட்டான்.

"நிலா" என்பதே பதிலாக கிடைத்தது.

"நான் உங்களை 'சுட்டு' என்பதன் பொருளைத் தான் கேட்டேன்" என்று கண்டனத்துடன் மறுதலித்துக் கூறியவன், "எதற்காக 'நிலா' என்று பதில் அளித்தீர்கள்?"

"ஏனேன்றால் 'சுட்டு' என்பதன் அர்த்தத்தினைத் தானே நீ கேட்டாய்" என்றார் குரு.

Source: Pointing at the moon by Alexander Holstein