website statistics

Sunday, August 14, 2005

நற்பண்பு நன்மையேத் தரும் - தினம் ஒரு ஸென் கதை

ஸென் துறவி ஹாகுய்ன் தன் இளவயதில் நடந்த கதையாக அடிக்கடி தன்னுடைய மாணவர்களுக்கு கூறும் கதையே இன்றைய ஸென் கதையாகும்.

மனதில் வெறுமை நிலையை அடைவதற்காக ஸென் துறவிகள் தியானம் புரிவது வழக்கம். உள்ளுணர்வுகளின் மனக்கற்பனைகளை அழித்து புலனுணர்வுகளால் தூண்டப் படாத உண்மையான மெய்ஞானத்தினை அடைவதே ஸென் தியானத்தின் நோக்கமாகும்.

வாலிபனாக இருந்த போது ஸென் ஆசிரியர்களை சந்திப்பதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஹாகுயன் செல்வது வழக்கம். ஒரு சமயம் ஹாகுயன் மற்ற இரண்டு புத்தத் துறவிகளுடன் மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அதில் ஒரு துறவியானவர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் களைப்படைந்து சோர்வடைந்திருந்தார். அவர் தன்னுடைய தோலில் தொங்கிய பயண மூட்டையையும் ஹாகுயினை எடுத்துக் கொண்டு வருமாறு வருந்தி வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

வாலிபனான ஹாகுய்ன் உடனே வேண்டுகோளை ஏற்று அவருடைய மூட்டையையும் தானே எடுத்துக் கொண்டார். மனதினை வெறுமையில் ஒரு முகப் படுத்தி இன்னொரு மூட்டை இருப்பதாகவே எண்ணிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவர்களுடன் வந்து கொண்டிருந்த மற்றொரு துறவி ஹாகுயினுடைய வாலிபப் பருவத்தினையும் உதவி செய்யும் ஆற்றலையும் கண்டு தானும் உடல் நிலை சரியில்லாதவன் போல் பாவனை செய்து தன்னுடைய மூட்டையையும் காகுயினை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார். மற்றவர்களுக்கு உதவும் புத்தத் தர்மத்தின் படி, மூன்றாவது பயண மூட்டையையும் தன்னுடன் எடுத்துக் கொண்ட ஹாகுய்ன், முன்பை விட ஆழமாக மனதினை வெறுமையில் மூழ்கச் செய்து கொண்டு அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

மூவரும் இனி படகில் மட்டுமே பயணத்தினை தொடர முடியும் என்ற நிலையில் ஓரிடத்தினை அடைந்தனர். படகில் ஏறி மூட்டைகளை வைத்த ஹாகுய்ன் பயணக் கலைப்பின் காரணமாக பலவீனமாகி மூட்டைகளுக்கு நடுவிலேயே படுத்து நன்றாக உறங்கி விட்டார்.

விழித்து எழுந்த போது ஹாகுயினால் தான் எந்த திசையில் இருக்கிறோம் என்பதனையேக் கண்டு பிடிக்க முடிய வில்லை. கரையை அடைந்தது போல் இருந்த அவருக்கு பயணத்தின் எந்த நினைவுமே இருக்க வில்லை. ஏதோ மிகவும் மோசமான கெட்ட நாற்றம் அடிப்பதையுணர்ந்த ஹாகுய்ன் சுற்றும் முற்றும் பார்த்தார். மற்ற அனைவரும் முகமெல்லாம் வாடி வாயெல்லாம் வாந்தியுடன் படுத்துக் கொண்டிருந்தனர். பயணத்தின் போது அடித்த பேய் சுழற்காற்றில் படகு பேயாட்டம் ஆடி கடற்குமட்டல் நோய்க்கு படகோட்டியுட்பட அனைவரும் ஆட்பட்டிருந்தனர்.

ஹாகுய்ன் மற்ற இருவரின் மூட்டைகளை எடுத்துக் கொண்டு வந்தக் களைப்பினால் தன்னிலையோ பேய்சுழற்காற்று அடித்ததோ தெரியாமல் பயணம் முழுவதும் தூங்கி விட்டிருந்தார். அதனால் கப்பல் பிரயாணத்தில் ஏற்படும் கடற்குமட்டல் நோயிலிருந்து தப்பி விட்டிருந்தார்.

இந்தக் கதையைக் தன் சீடர்களிடம் கூறிய காகுயன், "என்னுடைய வாழ்நாள் அனுபவ அறிவானது நம்மிடம் மறைந்திருக்கும் நல்லோழுக்கமானது எப்பொழுதுமே நன்மையையேத் தரும் என்ற உண்மையினை அறிய உதவியது" என்றார்.

வருகை தந்ததற்கு மிகவும் நன்றி! வாசித்த பின் உங்களுக்கு ஆர்வமிருந்தால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 'சுமார் (-)' அல்லது 'அருமை (+)' என்பதில் ஒன்றை தேர்ந்தெடுத்து www.thamizmanam.comதில் இந்த பதிவை மதிப்பீடு செய்யலாம். தற்போதய மதிப்பிட்டை இந்த நட்சத்திரங்களின் மீது மௌஸை நிறுத்தி காணலாம்: வாக்களிக்க நட்சத்திரங்களை சுட்டவும். நன்றி!

6 மறுமொழிகள்:

நேரம் 5:23 AM, Blogger பரஞ்சோதி கூறியது...

அருமையான கதை, ஆழமான கருத்துகள் கொண்ட கதை. எல்லாம் நன்மைக்கே.

இது மாதிரி நம்மில் மறைந்திருக்கும் நல்லொழுக்கத்தினால் நாம் பெரிதுபடுத்தாமல் செய்யும் சில காரியங்கள் நாம் எதிர்பார்காமலேயே நிறைய நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும்.

இதற்கு நிறைய கதைகள் உண்டு. நினைவில் இருப்பதில் இரண்டை விடுகிறேன்.

முதலில் எங்க பாட்டி சொன்ன ஒரு கதை, ஒரு வேடன் (பெயர் தெரியவில்லை) வேட்டையாட சென்ற போது ஒரு பயங்கரமான மிருகம் அவனை விரட்ட அவனோ ஓடி போய் ஒரு மரத்தின் மேல் ஏறிவிடுவான், அந்த மிருகமோ கீழே படுத்துக் கொள்ள, இரவு முழுவதும் இந்த வேடன் அந்த மரத்தின் கிளைகள் கிள்ளி கீழே எரிந்து மிருகத்தை விரட்ட பார்ப்பான், ஆனால் இரவு முழுவதும் அப்படி செய்தும் அந்த மிருகம் இடத்தை விட்டு நகராது, விடியற்காலையில் மிருகம் பசி தாங்காமல் சீ, சீ இந்த வேடன் புளிப்பான் என்று சொல்லி போய்விடும்.

அந்த வேடன் இறந்தப் பின்பு அவனை சொர்க்கமா, நரகமா என்று சித்திரகுப்தன் முன் பார்க்கும் போது, அவன் செய்த தொழிலில் பலவகையான மிருகங்களை கொன்றிருப்பான், ஆனாலும் அவனுக்கு சொர்க்கம் என்று சொல்லியிருக்கும், எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள், வேடன் உட்பட . அப்போ சித்திரகுப்தன் சொல்வார் "இந்த வேடன், ஒரு சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து, இறைவனை வில்வ மர இலைகளால் அர்ச்சனை செய்தான், அதன் பலனே சொர்க்கம் என்பார். ஆமாம் அந்த வேடம் ஏறி அமர்ந்த மரம் வில்வ மரம், மரத்தின் கீழே பூமியில் புதைந்தப்படி ஒரு லிங்கம் இருந்தது, சிவராத்திரி அன்று மிருகத்திற்கு பயந்தி விழித்திருந்தாலும், அவனுக்கு அதற்கான பலன் கிடைத்தது.

அடுத்த கதை நான் படித்த ஈசாப் நீதிகதைகளிலிருந்து,

ஒரு முறை ஈசாப் ஒரு பணக்கார வியாபாரியிடம் அடிமையாக வேலை செய்து வந்தார், அவருடன் நிறைய அடிமைகள். ஈசாப்பின் அமைதியான குணம், கோபப்படாத மனப்பக்குவம், எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையை புரிந்த மற்ற அடிமைகள் இவரை தங்களுக்கு ஏற்ப உபயோகித்துக் கொள்வார்கள்.

ஒரு முறை அந்த பணக்கார வியாபாரி தொழில் செய்ய கிளம்ப, தன்னுடைய விற்பனை பொருட்களை எல்லாம் மூட்டை கட்டச் சொல்வார், நிறைய மூட்டைகள். ஈசாப்புக்கு என்று ஒரு மூட்டையை சுட்டி காட்டியும், மற்ற அடிமைகள் ஒரு மிகப்பெரிய மூட்டையை மட்டும் ஈசாப்பிற்கு விட்டு விட்டு, சிறிய சிறிய மூட்டைகளை தூக்கிக் கொண்டு வியாபாரியுடன் நடப்பார்கள்.

ஈசாப்பும் கொஞ்சம் வருத்தப்படாமல் அந்த பெரிய மூட்டையை தூக்கிக் கொண்டு நடப்பார். அப்போ எல்லாம் வியாபாரம் செய்ய நடந்து தான் செல்ல வேண்டும், சில நாட்களிலேயே ஈசாப்பின் மூட்டை எடை குறைந்து, இன்னும் சில நாட்களில் மூட்டையே இல்லாமல் நடந்து சென்றார், மற்றவர்கள் எல்லாம் அதே எடை கொண்ட மூட்டையோடு நடை பயணம் செய்தார்கள். அது எப்படி தெரியுமா?

ஈசாப் தூக்கிய பெரிய மூட்டையில் சாப்பாடு இருந்தது, அனைவரும் தினமும் சாப்பிட சாப்பிட எடை குறைந்து போய், ஈசாப் எளிதாக செல்ல உதவியது.

கதைக்குள் கதைகளா? என்று நினைப்பீங்கன்னு நினைக்கிறேன்.

 
நேரம் 9:36 AM, Blogger Kangs(கங்கா) கூறியது...

பரஞ்சோதி,
நீங்கள் கூறிய இரண்டு கதைகளுமே பொருத்தமான அருமையான கதைகள்.
நன்றி.

 
நேரம் 11:54 PM, Blogger cme_9 கூறியது...

wow ! how do you blog in tamil? I would love to know
thanks
cme_9@yahoo.com

 
நேரம் 1:50 PM, Blogger Kangs(கங்கா) கூறியது...

Sorry for the late reply.. I was in vacation for a short period..

To download the font use the following link: (And remember, these fonts are Unicode supported UTF-8)
http://www.maraththadi.com/fonthelp.asp

To know about enabling Indic Language in your system, use the following Link:
http://www.bhashaindia.com/Developers/MSTech/IndicSupport/indicinstall.aspx

To write in Tamil, use the following link
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

To start a blog on your own, use the following link.
http://www.blogger.com

Goto thamizmanam site, where you can get plenty of information about how to start a blog in Tamil.
http://www.thamizmanam.com/tamilblogs/bloggers.php

If you need more information, please let me know...

 
நேரம் 8:54 AM, Blogger parton கூறியது...

ストーカー 高級クラブ 求人 二人だけの結婚式 大人のおもちゃ 表参道 エステ ビジネス 英会話 税理士 東京 電報 結婚式 まつげエクステ カップリングパーティー 浮気調査 興信所 興信所 高収入 アルバイト 高収入 アルバイト 競馬 電話占い カップリングパーティー ウェルカムボード 株式情報

 
நேரம் 7:08 AM, Blogger sexy கூறியது...

情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣用品,情趣,情趣,情趣,情趣,情趣,情趣,情趣用品,情趣用品,情趣,情趣,A片,A片,情色,A片,A片,情色,A片,A片,情趣用品,A片,情趣用品,A片,情趣用品,a片,情趣用品,A片,A片

A片,A片,AV女優,色情,成人,做愛,情色,AIO,視訊聊天室,SEX,聊天室,自拍,AV,情色,成人,情色,aio,sex,成人,情色

免費A片,美女視訊,情色交友,免費AV,色情網站,辣妹視訊,美女交友,色情影片,成人影片,成人網站,H漫,18成人,成人圖片,成人漫畫,情色網,日本A片,免費A片下載,性愛

情色文學,色情A片,A片下載,色情遊戲,色情影片,色情聊天室,情色電影,免費視訊,免費視訊聊天,免費視訊聊天室,一葉情貼圖片區,情色視訊,免費成人影片,視訊交友,視訊聊天,言情小說,愛情小說,AV片,A漫,AVDVD,情色論壇,視訊美女,AV成人網,成人交友,成人電影,成人貼圖,成人小說,成人文章,成人圖片區,成人遊戲,愛情公寓,情色貼圖,色情小說,情色小說,成人論壇


免費A片,日本A片,A片下載,線上A片,成人電影,嘟嘟成人網,成人貼圖,成人交友,成人圖片,18成人,成人小說,成人圖片區,微風成人區,成人文章,成人影城

A片,A片,A片下載,做愛,成人電影,.18成人,日本A片,情色小說,情色電影,成人影城,自拍,情色論壇,成人論壇,情色貼圖,情色,免費A片,成人,成人網站,成人圖片,AV女優,成人光碟,色情,色情影片,免費A片下載,SEX,AV,色情網站,本土自拍,性愛,成人影片,情色文學,成人文章,成人圖片區,成人貼圖

 

Post a Comment

<< முதல் பக்கம்